பாண்டியன் ஸ்டோரில் நடிக்கும் ஜீவா என்றால் அனைவருக்கும் நன்றாக தெரியும், அந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலம், அதில் அண்ணன் தம்பிகளில் இரண்டாவதாக நடிக்கும் பையன் பெயர் ஜீவா. இவரின் உண்மையான பெயர் வெங்கட் பழனியை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் தொகுப்பாளராக அறிமுகமானார், சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பின்னர் கனா காணும் காலங்கள், புகுந்த வீடு, ஆண்பாவம், தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே என பல தொடர்களில் நடித்து வந்துள்ளார்.
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கும் இவர் மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதேபோன்று நிஜ வாழ்க்கையிலும் தன்னுடன் கல்லூரியில் பயின்ற அஜந்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். வெங்கட் அஜந்தா தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை உண்டு.