Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாண்டியா போட்ட ட்விட்…. அப்படியா..! அப்போ எங்ககிட்ட தோத்து போங்க…. வம்பிழுத்த பாக் நடிகை…. பதிலடி கொடுத்த ரசிகர்கள்..!!

இந்திய அணி தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட பதிவை பாகிஸ்தான் நடிகை கிண்டலடித்துள்ளார்..

ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருந்த போதிலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிரட்டலாக ஆடி இருந்தனர். குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் (5 சிக்ஸர், 7 பவுண்டரி) 71 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார்..

இருப்பினும் இந்திய அணி தோல்வி அடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இந்நிலையில் போட்டிக்கு பின் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் கற்றுக்கொள்வோம். சரி செய்து கொள்கிறோம். எப்பொழுதும் எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருந்தார். ஹர்திக் பாண்டியாவின் இந்த பதிவிற்கு கீழ் பாகிஸ்தான் நடிகைசேஹர் ஷின்வாரி  ஒரு கமெண்ட் செய்திருந்தார், அதில், அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடையுங்கள், நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் என்று நக்கல் செய்தியும் செய்யும் விதமாக சிரிக்கும் படியாக எமோஜியை பதிவிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவை கண்ட இந்திய ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது குறிப்பிட்டு ரசிகர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் ரசிகர் ஒருவர், உங்களது நாட்டில் ஒரு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எங்களது இந்திய நாட்டின் போட்டியை நீங்கள் பார்த்துள்ளீர்கள், அப்படி என்றால் அதுதான் இந்தியாவின் தரம் என தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

Categories

Tech |