தற்போதைய கால கட்டங்களில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது குதிங்கால் வலி. பாதங்களில் ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு பாதங்களில் வலி உள்ளவர்கள் “காண்ட்ராஸ்ட் பாத்” என்ற சிகிச்சையை வீட்டிலேயே செய்யலாம். ஒரு பாத்திரத்தில் வென்னீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை மாலை இரு வேளைகளும் செய்து வந்தால் வலி இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப் போய்விடும்.