ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனாவால் பாதயாத்திரையை ஒத்தி வையுங்கள் (அ) கொரோனா நெறிமுறைகளை பின்பற்றும்படி ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ராகுல், யாத்திரை பயணத்தை நிறுத்த பாஜக அரசு கோவிட் என்ற புதிய யோசனையை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் பேசிய அவர், தனது நடைபயணத்தை நிறுத்துவதற்கான சாக்கு இது. இந்தியாவின் உண்மையை கண்டு பாஜகவினர் பயப்படுகிறார்கள். இது கொரோனாவுக்காக அல்ல, பாதயாத்திரையை நிறுத்துவதற்கு அவர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு காரணம் என விமர்சித்துள்ளார்.