Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்…. நொடிப்பொழுதில் நேர்ந்த துயரம்…. பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பாதயாத்திரை சென்ற திருநாவுக்கரசு, சேகர் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பெண் பக்தர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |