சென்னை மாவட்டத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் பாதாள அறையில் தடை செய்ய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹுக்கா போதைப்பொருள் பார் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் அந்தக் கடைக்கு சென்று பாரில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஹூக்கா போதை பொருள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாரை நடத்திய முஸ்தாக் அகமது என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பாரில் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களை தவிர மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்த போலீசார் பாரை மூடி சீல் வைத்து சென்றனர்.