Categories
தேசிய செய்திகள்

பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தான் – ப.சிதம்பரம் ….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ,உறுதியான பாசன வசதி இல்லாத நிலங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டமே பாதுகாப்பு என்று உணர்ந்து அத்திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது அத்திட்டத்தை பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்து, இப்பொழுது முற்றிலும் குலைக்க முடிவெடுத்திருக்கிறது.

இன்சூரன்ஸ் பிரிமியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இனி குறைக்கப்படுகிறது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு இனி பயிர் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை இந்த மாற்றங்களின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். பயிர் இன்சூரன்ஸ் பெற்ற நிலங்களின் பரப்பளவு ஏற்கனவே குறைவு. இது மேலும் குறையும். பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

Categories

Tech |