Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்ட உடல் நலம்…. கண்டுபிடிக்கப்பட்ட காரணம்…. பிரபல நாட்டில் தம்பதியினருக்கு கிடைத்த இழப்பீடு….!!

பிரான்ஸ் நாட்டில் காற்றாலை மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதன் உரிமையாளர் மீது ஒரு தம்பதியினர் வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கை தெற்கு பிரான்சில் டார்ன் பகுதியில் குடியிருக்கும் Christel மற்றும் Luc Fockaert தம்பதிகள் தங்களுடைய உடல்நிலை பாதிப்புக்கு காற்றாலைகள் தான் காரணம் என்று கண்டறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விசாரித்த Toulouse பகுதி நீதிமன்றம் தம்பதியினர் கூறியது உண்மை என்று நிரூபித்ததை அடுத்து அவர்களுக்கு 1 லட்சம் யூரோ தொகைக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க ஆணையிட்டுள்ளது.

மேலும் இவர்களின் குடியிருப்புக்கு 700 மீட்டர் தொலைவில் 2008ஆம் ஆண்டு 6 காற்றாலைகள் நிறுவப்பட்டது. எனவே 5 ஆண்டுகளுக்குப் பின்னர், தம்பதிக்கு தொடர்ந்து உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டதால் அவர்கள் 2015ஆம் ஆண்டு வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளனர். அதன் பின்னர், இவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரியவந்தது. எனவே இந்த காற்றாலையை நிறுவிய நிறுவனத்திற்கு எதிராக சட்ட போராட்டத்திற்கு தயாராகினர். அந்த தம்பதியினருக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் யூரோ தொகையை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |