சென்னையில் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணில் 9444772222 புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.