வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் காமராஜர் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளியான கார்த்திக்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வாலிபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தும் அதிரடியாக உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.