Categories
மாநில செய்திகள்

பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில்…. முதல்வர் இன்று ஆய்வு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகங்களில் இலவச உணவும் வழங்க உத்தரவிட்டார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்கு நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

அந்தவகையில் பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளார். மேலும் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். இது குறித்து தனது தொண்டர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிட மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒருவர்கூட பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும், எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியைப் போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |