அக்டோபர் 12 ஆம் தேதி நைஜீரியாவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவின் தாக்கத்தால் பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தடுப்பு மருந்து உலகம் முழுவதிலும் கிடைக்கும் வரை 20 லட்சம் பேர் தொற்றினால் உயிர் இழப்பார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதனால் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றினால் ஏற்படும் பாதிப்பின் அளவு நைஜீரியாவில் குறைந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இம்மாதம் 12ம் தேதி முதல் திறக்கப்படும் என்று நைஜீரியாவின் கல்வித் துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நைஜீரியாவில் 59,001 பேர்கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50,452 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.