Categories
மாநில செய்திகள்

பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க குழு….. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை அவ்வபோது கண்காணிக்க குழு அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான குழுவில் 13 பேர் இடம் பெற்றுள்ளனர். மருத்துவ வல்லுநர்கள் குகானந்தம், குழந்தைசாமி, மனோஜ் முர்ஹேகர், ஜெயப்பிரகாஷ் முலியில் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Categories

Tech |