Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாதியிலேயே நின்ற படிப்பு…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுக்கல் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் டிப்ளமோ படித்து வந்த நிலையில் பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு கோவையில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தார். இந்நிலையில் விஷ்ணுவின் தாய் கீழே தவறி விழுந்ததால் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் விஷ்ணுவின் கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலாததால் படிப்பு பாதியிலேயே நின்றது.

இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் அருகே இருக்கும் வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து விஷ்ணு படிக்க முயற்சி செய்து பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்ணுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |