Categories
சினிமா

பாதியில் நிறுத்தப்பட்ட RRR…. கலவரத்தில் இறங்கிய ரசிகர்கள்…. தியேட்டரில் பரபரப்பு….!!

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர்  ராஜமவுலி இயக்கத்தில் உருவான  திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR. கதாநாயகனாக ராம்சரண் மற்றும் முதன்மை கதாபாத்திரமாக ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது.

இந்நிலையில் திரையரங்கில் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கியும் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தனர். இதை அறிந்த போலீசார் திரையரங்கிற்கு விரைந்து வந்து ரசிகர்களை அப்புறப்படுத்தி சென்றனர்.

Categories

Tech |