அமெரிக்காவின் பறவை ஆர்வலரான ஜேமி ஹில் எடுத்த அரிய வகை பறவையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அமெரிக்காவில் கடந்த 48 வருடங்களாக பறவைகள் குறித்து ஆய்வு செய்து வருபவர் ஜேமி ஹில். பறவை ஆர்வலரான இவர் அமெரிக்காவின் கிராண்ட் வேலி பகுதியில் தென்பட்ட கர்தினால் என்னும் அரிய வகை பறவையை படம் பிடித்துள்ளார். இந்தப் பறவை குறித்து அவர் கூறுகையில், “கர்தினால் என்பது ஒரு வகை குருவியாகும். இதில் ஆண் குருவி சிவப்பு நிறத்திலும், பெண்குருவி சாம்பல் நிறத்திலும் காணப்படும்.
இதில் 10 லட்சத்தில் ஒரு பறவை ஆணும் பெண்ணும் கலந்தது போல அதாவது பாதி சிவப்பு நிறத்திலும், பாதி சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும். இந்த அரிய வகைப் பறவையை காண்பது மிகவும் கடினமாகும். மேலும் இந்த பறவை வழக்கத்துக்கு மாறான ஓர் அழகாகும்” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.