ஈரோடு அருகே வீடு கட்டித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 30 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளும்படி காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவரிடம் புகார் அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே தாசம் பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 50 சதவீதம் கட்டணம் செலுத்தினால் அரசின் சலுகை பெற்று வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் 30 கோடி ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் பலமுறை வலியுறுத்தியும் வீடுகளை கட்டி தராமல் இழுத்தடித்த நிறுவன உரிமையாளர் இளங்கோ என்பவர் திடீரென தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.