ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் வேட்பாளர் ஒருவர் சொன்னபடியே பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக் கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 54 வார்டுகளைக் கொண்ட நெல்லூர் மாநகரில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஆளுங்கட்சியான YCB காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 50-ஆவது வார்டில் சர்வதேசம் கட்சி சார்பில் கபீரா சீனிவாசன் என்பவர் தேர்தலை சந்தித்தார்.
அப்போதுதான் அதை எதிர்த்து போட்டியிட்டு வேட்பாளர் வெற்றி பெற்றால் பாதி மொட்டை பாதி மீசையை எடுத்துக் கொள்வதாக சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் நெல்லூர் மாநகரில் 54 வார்டுகளிலும் ஆளுங்கட்சியான YCP வெற்றி பெற்றுள்ளது. இதனால் தோல்வியடைந்த கபீரா சீனிவாசன் சொன்னபடியே பாதி மொட்டை பாதி மீசை எடுத்துக் கொண்டு அடுத்த சட்டமன்ற தேர்தல் வரையிலும் இப்படியே தொடருவேன் என கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.