தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை 13 முதல் 17ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட்டை www.dge.tn.go.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் வருகின்ற 27ஆம் தேதி நடக்கவுள்ள 12ம் வகுப்பு மறுத்தேர்வை உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவைப்படும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேர்வு மையங்கள் இருந்தால் வேறு மையங்கள் அமைக்க வேண்டும் என்றார்.