சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்ற அறையை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட அலுவலக பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது.
இந்த தேர்வை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 686 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த எழுத்து தேர்வு சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சேலத்திலுள்ள ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் ராமன் நேரில் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வு அறைகளையும் பார்வையிட்டுள்ளார்.