நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்று எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் கூறியுள்ளார். அதில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு துறையில் 7, 476 அதிகாரிகள் பணியிடங்களும், 97177 வீரர்கள் பணியடங்களும், இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் பணியிடங்களும், 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக உள்ளன
பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் என்சிசி முகாம்களில் ஊக்குவிப்பு உரைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.