Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயற்சி”… நடுரோட்டில்அமர்ந்து மறியல்… பெரும் பரபரப்பு….!!!!

பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் தாலுக்கா கீழ் ஆலத்தூர் அடுத்துள்ள நாகல் காலனியில் வசித்து வருபவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி கலையரசன் (32). இவருக்கு 2 மனைவிகள் 30 வயதுடைய கலையரசி, 29 வயதுடைய சீதா. இவர்களின் உறவினர் 27 வயதுடைய மரியா. இவர்களின் குடும்பத்திற்கும் மற்றொரு தரப்பினர்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கலையரசன் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு செல்லும்போது அந்த தரப்பினர் வழிமறித்து பிரச்சினை செய்துள்ளார்கள். இதனை தட்டிக் கேட்க சென்ற கலையரசினின் மனைவி கலையரசி, சீதா ஆகியோரையும் தாக்கி மிரட்டினார்கள்.

அவர்கள் ஏற்கனவே தாக்கியதாக கடந்த 2022ஆம் வருடம் மே 20ஆம் தேதி கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த 2022ஆம் வருடம் ஜூன் 1ஆம் தேதி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று முன்தினம் காலை சீதா என்பவர் கே.வி குப்பம் காவல் நிலையம் எதிரில் தன் மீதும், குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

அதன்பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறினார்கள். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை அடுத்து ஏற்கனவே கலையரசனை தாக்கிய கும்பல் போலீசில் புகார் அளித்து விட்டு சென்ற கலையரசனின் அக்காள் மீனா மற்றும் அவருடைய மகன்கள் கிஷோர், நவீன ஆகியோரை வழிமறித்து தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த மீனா, கிஷோர், நவீன ஆகியோர் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மீண்டும் கே.வி குப்பம் காவல் நிலையத்தில் கலையரசன் தரப்பினர் புகார் மனு அளித்துள்ளனர். கலையரசன் தரப்பில் மரியா என்பவர் இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இடம் ஆன்லைனில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Categories

Tech |