சத்தீஸ்கரின் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் சுக்மா மாவட்டத்தில் உள்ள மோர்பள்ளி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து மத்திய மற்றும் மாநில காவல்துறை படையினர் சேர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். அதில் 8 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.