Categories
உலக செய்திகள்

“பாத்திங்களா இவங்க திருட்டு வேலைய”…. கூட்டு பயிற்சியில் ரஷ்யா…. அதிகரிக்கும் போர் பதற்றம்….!!!

பொலாரஸ் நாட்டுடன் ரஷ்யா இணைந்து  கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் படைகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் அபாயம் நிலவி வருகிறது. மேலும் அமெரிக்காவின் தலைமையில் நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பதால் போர் பதற்றம் சற்றே அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரேனை எதிர்த்து போர் தொடுப்பதற்கு 70 சதவீத இராணுவ படைகளை திரட்டி உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் மீது படை எடுக்கும் எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடன் பொலாரஸ் இணைந்து பத்து நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. மேலும் பொலாரஸ் உக்ரைனின் நீண்ட தெற்கு எல்லையை கொண்ட நாடு ஆகும். இதனால் 30,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Categories

Tech |