நம்முடைய சமையலறையில் பயன்படுத்தும் சில பாத்திரங்கள் கறை படிந்து இருக்கும். இந்த கறைகளை அகற்றுவது என்பது சற்று கடினமான விஷயம். ஏனெனில் இந்த கரையை நீக்குவதற்கான சில டிப்ஸ்கள் குறித்து இப்போது பார்க்கலாம். கறைகளை எளிமையாக அகற்றுவதற்கு ஒயின் பயன்படுத்தப்படுகிறது. கறை உடைய பாத்திரத்தில் ஓயினை ஊற்றுவதால் கறை நீங்கிவிடும். கரைப்பிடிந்து பாத்திரத்தை வெந்நீரில் வைத்து 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் சோப்பு வைத்து சுத்தம் செய்தால் மாறிவிடும். பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொள்ளவும்.
இதில் ஒரு கப் வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சீடார் வினிகரை சேர்த்து கருகிய பாத்திரத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து பின்ன சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கரைபடிந்த பாத்திரத்தை அதில் இட்டு ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து பாத்திரத்தை எடுத்து உப்பு வைத்து சுத்தம் செய்தால் கறை நீங்கிவிடும். பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வெங்காயம் தோலை சேர்த்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின்னர் சாதாரண தண்ணீரில் இந்த பாத்திரத்தை கழுவ வேண்டும். பாத்திரத்தின் கறைகளின் மீது ஹார்போஹைடிரேட் நிறைந்த சோடாக்களை ஊற்றி வைத்து பின்னர் கழுவினால் நல்ல மாற்றம் தெரியும். ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும். பின் இதோட எலுமிச்சை சாறு கலந்து கறை படிந்த பாத்திரத்தை தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா பாத்திரத்தில் உள்ள கறைகளை நீக்க பயன்படுகிறது.