உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் முனியசாமி என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் முதியவர் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் வீட்டில் அவரை கவனித்துக்கொள்ளவும் யாரும் இல்லாததால் மனமுடைந்த முதியவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக முதியவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் முனியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மகன் பாலாஜி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.