Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாத்து மூவ் பண்ணுங்கப்பா…. லேசா போச்சு…. நார்ட்ஜே  மீது மோதிய ‘ஸ்பைடர்கேம்’…. நகைச்சுவை ட்விட்.!!

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே  மீது ‘ஸ்பைடர்கேம்’ மோதியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது..

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகின்றது. இதில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களான உஸ்மான் கவாஜா 1  மற்றும் மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இருப்பினும் ஸ்மித் – வார்னர் ஜோடி சிறப்பாக ஆடியது. துவக்க  வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். வார்னர் 254 பந்துகளில் (16 பவுண்டரி, 2 சிக்ஸர்) 200 ரன்கள் குவித்தார்.

இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த வார்னருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் ‘ரிட்டயர் ஹர்ட்’ ஆனார்.. வார்னர் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். அதாவது 100ஆவது போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக 2ஆவதாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் 85 ரன்கள் எடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து  டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். கேமரூன் கிரீன் 6 ரன்னில்ஆடிக்கொண்டிருந்தபோது, அன்ரிச் நார்ட்ஜே பந்துவீச்சில் கைவிரலில் பட்டு அவருக்கு ரத்தம் வந்தது. இதனால் கிரீனும் ‘ரிட்டயர் ஹர்ட்’ ஆனார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் அலெக்ஸ் கேரி கைகோர்த்து ஆடினார். இறுதியில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலையில் வலுவாக உள்ளது. டிராவிஸ் ஹெட் 48, அலெக்ஸ் கேரி 9 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 3ஆம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரரான ஸ்மித் – வார்னர் இருவரும் களத்தில் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தபோது, சிறிது இடைவேளை நேரத்தில் மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே மீது ஸ்பைடர் கேம் கேமரா திடீரென எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை சிலர் கிண்டலாகவும், சிலர் சரியாக இயக்குமாறும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இதற்கிடையே ட்விட்டர் பக்கத்தில் அன்ரிச் நார்ட்ஜே ‘இட்சி பிட்ஸி ஸ்பைடர்’ என பதிவிட்டுள்ளார். இது குழந்தைகளுக்கான Itsy Bitsy Spider பாடல் ஆகும். இதனை குறிப்பிட்டு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 

 

https://twitter.com/BishOnTheRockz/status/1607625294814547969

Categories

Tech |