Categories
தேசிய செய்திகள்

பாத்ரூம் கிளீனரை குடித்ததால்…. கர்ப்பிணி மனைவி பலி…. கணவரின் கொடூரச்செயல்….!!!!

கழிவறை கிளீனரைக் குடிக்குமாறு கணவர் வற்புறுத்தியதால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள வர்னி மண்டலில் உள்ள ராஜ்பேட் தாண்டாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை கழிவறையை சுத்தம் செய்யும் அமிலத்தைக் கணவர் குடிக்க வற்புறுத்தியதால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அப்பெண்ணின் கணவர்  தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தருண் என்பவர் கல்யாணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு முன் கல்யாணி கர்ப்பமானபோது, ​​தருண் அவரை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். எனவே கல்யாணி தான் அழகாக இல்லை என்று சொல்லி கணவர் வற்புறுத்துவதாகவும் , வரதட்சணை கேட்டு குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்த ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை தருண் கல்யாணியை குடிக்க வைத்துள்ளார்.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்யாணி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.  இதனையடுத்து கல்யாணியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தருண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |