Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பானிபூரி கடைக்கு சென்று வந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரிமங்கலத்தில் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றபோது அவருக்கும் விக்னேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது கடந்த மாதம் 8- ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என காரிமங்கலம் காவல்நிலையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷ் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு தர்மபுரியில் இருக்கும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |