ஊழியர் ஒருவர் பானிபூரி ரசத்திற்கு கழிவறை நீரை பயன்படுத்திய சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை அடுத்த கோல்ஹாபூரிலுள்ள ரன்கலா ஏரி பக்கத்தில் பானிபூரி கடை ஒன்று உள்ளது. பானிபூரி என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இந்த கடை பானிபூரி மிகவும் சுவையாக இருப்பதாக கூறி எப்போதும் கூட்டம் வந்து கொண்டே இருப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த கடையின் ஊழியர் பானிபூரியின் ரசத்திற்கு கழிவறையில் இருந்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஊற்றியுள்ள காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததையடுத்து இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இதனை பார்த்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கடையில் உள்ள ஊழியரிடம் சண்டையிட்டு அங்கிருந்த பொருள்களையெல்லாம் எடுத்து தெருவில் வீசியுள்ளனர்.இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், பொதுவாக நாம் சாப்பிடும் உணவகங்களில் சாப்பிடும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை தெரிந்த பிறகே சாப்பிட வேண்டும் இல்லையென்றால் இது போன்ற விளைவுகளை தான் சந்திக்க நேரிடும்.