மேற்கு வங்காளத்தில் மலைகளின் ராணி என செல்லப் பெயர் உடைய டார்ஜிலிங் நகரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். இதில் மம்தா அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சாலை ஓரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தி வரும் “சண்டேஹாட்” எனும் பானிபூரி கடைக்கு சென்றார். அங்கு இருந்த பெண்கள் பானி பூரி தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதைக் கண்டார். அவர்களது கடினமான உழைப்பை பார்த்து மம்தா பானர்ஜி பாராட்டினார். இதையடுத்து மம்தா எத்தயக்கமும் இல்லாமல் அப்பெண்களுடன் தானும் சேர்ந்து கொண்டு உற்சாகமாக பானிபூரி தயாரித்தார்.
அவர் பூரிக்குள் மசித்த உருளைக் கிழங்கை வைத்து, புளித்தண்ணீரில் நனைத்து தன் கைப்பக்குவத்தை காட்டி அசத்தினார். பின் அந்த பானிபூரியை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கினார். இந்த வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பகிர, அது வைரலாகியது. மம்தாபானர்ஜி டார்ஜிலிங்குக்கு கடந்த முறை சென்றபோது சாலையோர ஸ்டால் ஒன்றில் திபெத் உணவான “மோமோ” தயாரித்துக்காட்டி அசத்தினார். அதேபோன்று சென்ற 2019ம் வருடம் திகா நகருக்கு சென்றுவிட்டு கொல்கத்தா திரும்பும் வழியில் அவர் ஒரு டீக்கடையில் டீ தயாரித்து மக்களுக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Our Hon’ble Chairperson @MamataOfficial visited SHG operated food stall, Sunday Haat in Darjeeling.
Showing her appreciation for the women’s hard work, she joined them in the preparation of Bengal’s favorite, Puchkas and also fed enthusiastic children the delectable snack! pic.twitter.com/ApBZeRDbao
— All India Trinamool Congress (@AITCofficial) July 12, 2022