Categories
தேசிய செய்திகள்

பானிபூரி ரொம்ப பிடிக்குமாம்…. அதான் கல்யாணத்துல இப்படி…. 40 லட்சம் பேர் பார்த்த வீடியோ…!!!

பானிபூரி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஏராளமானவர்கள் இதற்கு அடிமையாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த பானிபூரிக்கு தன்னை விட ரசிகர்கள் இருக்க மாட்டர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் அக்ஷயா என்பவர் தன்னுடைய திருமணத்தில் தங்க அணிகலன்களோடு சேர்த்து பானிபூரியும் கோர்த்து அணிகலனாக அணிந்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்த  வீடியோவை ஆர்த்தி பாலாஜி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை 40 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

Categories

Tech |