காத்மாண்டு பள்ளத்தாக்கு இடங்களில் பானி பூரி விற்க லலித்பூர் மாநகராட்சி தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த பகுதியில் திடீரென காலரா நோய் பரவிவருகின்றது. இங்கு ஏற்கனவே 12 பேருக்கு காலரா நோய் உறுதி செய்யப்பட்டதால் லலித்பூர் மாநகராட்சி தடை விதித்துள்ளது. எனவே இங்கு பானிபூரி விற்பனை செய்யக்கூடாது என திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு பானிபூரி விற்கவும், வாங்கவும் தடை விதிக்க லலித்பூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் பானிபூரியில் வழங்கப்படும் தண்ணீர் மூலமாக இந்த காலரா நோய் கிருமிகள் பரவும் என்ற அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கு பகுதியில் காலரா பரவாமல் தடுக்கும் வகையில் அதிக கூட்டம் கொண்ட இடங்களில் மற்றும் முக்கிய வளாகங்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.