Categories
தேசிய செய்திகள்

பான்-ஆதார் இணைக்காதவர்களுக்கு…. வருமானவரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவித்தது. இதற்கான காலகெடு பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் இந்த கால அவகாசத்தை வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்தது.  இந்நிலையில் நீங்கள் ஆதாருடன் பான் எண் இணைக்காமல் இருந்தால் பான் கார்டு பயன்படுத்தும் போது ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இவ்விதம் இணைக்காத நிரந்தர கணக்கு எண்(பான்) ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் மார்ச் 2023 வரை வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |