தனுஷ் நடிக்கவிருக்கும் பான் இந்தியா திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இத் திரைப்படமானது சுதந்திரத்திற்கு முன்னதாக உள்ள காலகட்டத்தில் நடக்கும் கதையைப் படமாக்குகிறார்கள். இந்த படத்தில் தனுஷ் கடற்படை அல்லது இராணுவத்தின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திரைப்படத்தை பான்- இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படம் மட்டும் வெற்றியடைந்தால் தனுஷின் கெரியர் அடுத்த கட்டத்திற்கு சென்று விடும். உச்ச நட்சத்திரமான விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்ததாக தனுஷ் திரைப்படம் தான் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது. தனுஷ் இந்த படத்தில் கண்டிப்பாக தன் நடிப்பின் மூலம் அசத்துவார் என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் தனுஷின் நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள். ரசிகர்கள் தனுஷின் இந்த படமும் வெற்றி அடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள். தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.