பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யா-கார்த்தி சகோதரி பிருந்தா இணைந்து இருக்கின்றார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்திக். இவர்களின் சகோதரி பிருந்தா. சிவகுமார் மகன்கள் இருவரையும் சினிமா துறைக்கு கொண்டு வந்தார். ஆனால் பிருந்தா படிப்பு, குடும்பம் என செட்டில் ஆன நிலையில் அண்மைக்காலமாக சினிமாவில் அவரை என்ட்ரி கொடுத்துள்ளார். அண்மையில் ஒரு பாடலுக்கு பாடியிருந்தார்.
இந்த நிலையில் இவர் பான் இந்தியா திரைப்படத்தில் களம் இறங்கி இருப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகின்றது. அந்த வகையில் ஆலியா பட்-ரன்பீர் நடிப்பில் வெளியாகியுள்ள பிரம்மாஸ்ட்ரா திரைப்படத்தில் தமிழ் வெர்ஷனில் இவர் ஆலியா பட்-டிற்கு டப்பிங் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இது பற்றி இணையத்தில் பிருந்தா பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதற்கு சூர்யா-கார்த்தி வாழ்த்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து நெட்டிசன்கள் என பலரும் வாழ்த்து கூறிய வருகின்றார்கள்.