Categories
தேசிய செய்திகள்

பான் கார்டில் திருத்தம்….. ஆன்லைனில் சரி செய்வது எப்படி…? இதோ முழு விபரம்….!!!!

பான் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் வங்கி பணப்பரிவர்த்தனைக்கு பான் கார்டு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இந்த பான் கார்டு பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருப்பதையும், நம்பகத் தனமானதாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இந்த பான் கார்டு வங்கி கணக்குடன் இணைக்கப் படுவதால் நாடு முழுவதும் உள்ள வங்கி சேவைகளை பொதுமக்களால் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் பான் கார்டில் பெயர் மற்றும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை எப்படி இணையதளத்தில் சரி செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

அதற்கு முதலில் என்எஸ்டிஎல் என்ற இணையதளத்துக்குள் சென்று பெயர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை பதிவிட்டு திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு https://www.onlineservices.nsdl.com/paam/என்ற இணையதள முகவரிக்குள் சென்று லாகின் செய்த பிறகு, அப்ளிகேஷனில் உள்ள பான் தரவு, பான் கார்டின் மறுப்பதிப்பில் உள்ள மாற்றங்கள், ரீபண்ட் பான் கார்டு என்பதை தேர்வு செய்து, தனிநபர் என்பதை கொடுத்துவிட்டு கீழ்காணும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதில் குடும்ப பெயர் அல்லது கடைசி பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, பான் கார்டு நம்பர் மற்றும் இந்தியாவின் குடிமகனா என்று அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்ய பிறகு, அதை சமர்ப்பிப்பதற்கு தரவை சமர்ப்பதன் மூலமும் அல்லது என்எஸ்டிஎல் இ-கோவ் டின் வலை தளத்தை பயன்படுத்துவதன் மூலமும் என்ற விருப்பத்தை தேர்வு செய்து விட்டு, கேப்ட்சா குறியீட்டை பயன்படுத்தி சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதை சமர்ப்பித்த பிறகு பேமெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்த வேண்டும்.

இதனையடுத்து ரெஃபரன்ஸ் நம்பர் மற்றும் ட்ரான்ஸ்லேஷன் நம்பரை சேவ் செய்துவிட்டு கண்டின்யூ என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து ஆதார் கார்டின் கீழ் உள்ள authentic என்பதை கிளிக் செய்து விட்டு, இ-கேஒய்சியைத் தொடர்ந்து இ-சைன் என்பதை கொடுக்க வேண்டும். அதன்பின் செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவு செய்து கிளிக் செய்தால் பிடிஎஃப் பார்மெட்டில் கிடைக்கும். அதை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்‌

Categories

Tech |