Categories
தேசிய செய்திகள்

“பான் கார்டு அப்டேட்” ரூ. 1.40 லட்சத்தை இழந்த தம்பதி…. 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் குஸ்தே என்பவருடைய செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் பான் கார்டு அப்டேட் என்று கூறி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தியை குஸ்தேவின் மனைவி கிளிக் செய்ததும் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ 1.40 பணம் காணாமல் போனது.

இது தொடர்பாக குஸ்தே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சூரத்தில் மொபைல் கடை வைத்துள்ள ஜெமிஸ் விரானி மற்றும் ஆஷிஷ் போதாரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்களுடைய நண்பர்களான பிரதீப் ரங்கன் மற்றும் விபுல் போக்ரா ஆகிய 2 பேரும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரிடமிருந்து ஏராளமான கிரெடிட் கார்டுகள், செல்போன்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |