இந்தியாவில் பான்கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த பான்கார்டு வருமானவரி துறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பதற்கு இந்த கார்டு உதவுகிறது. அதேபோன்று ஒருவரது முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் போன்றவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது.
தற்போது எதற்கெல்லாம் இந்த கார்டு தேவை என்பதை பாப்போம். அந்த வகையில் ஒருவர் அடையாளம் ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்தலாம். மேலும் முதலீட்டு நோக்கத்திற்காக, லோன் பெறுதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல், புதியதாக வங்கி கணக்கை திறக்க, ரியல் எஸ்டேட்டுக்காக, அந்நிய செலவாணிக்காக, எஃப்டி கணக்கிற்காக, தொலைபேசி கனெக்சன் பெற மற்றும் நகை வாங்குவதற்கு ஆகியவற்றிற்கு பான்கார்டு பயன்படும்..