Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு தொலஞ்சி போச்சா…? கவலை வேண்டாம்…. வெறும் 10 நிமிடத்தில் ePAN எடுக்கலாம்…!!!

உஙக்ளுடைய பான் கார்டு தொலைந்து போய்விட்டால் அவசரத்திற்காக e-pan அல்லது  தங்கள் பான் கார்டின் டிஜிட்டல் பதிப்பை டவுன்லோடு செய்யலாம். இப்போது வெறும் 10 நிமிடத்திற்குள் எப்படி டவுன்லோடு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

இதற்கு முதலில் Income Tax e-filing-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.incometax.gov.in க்குள் நுழைய வேண்டும். பின்னர் Our Services என்கிற பிரிவின் கீழ், Instant e-PAN என்கிற விருப்பத்தைத் தேடி கண்டுபிடிக்கவும். நீங்கள் முன்பே e-PAN-ஐ பதிவிறக்கம் செய்திருந்தால், Check Status/Download e-PAN என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். ஒருவேளை முன்னதாக e-PAN-ஐ டவுன்லோட் செய்ததில்லை என்றால் Get new e-Pan என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து உங்கள் தேவைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்ய வேண்டும், பின்னர் continue என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது, உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்டு ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டவுடன், பக்கம் ஒரு அறிவிப்பைக் காண்பிக்கும், அதனை தொடர்ந்து continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட அல்லது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். பின்னர், கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் மொபைலில் நீங்கள் பெற்ற OTP-ஐ உள்ளிடவும். இப்போது நீங்கள் காணும் பக்கம் உங்களை பற்றிய எல்லா விவரங்களையும் காண்பிக்கும். எல்லா தகவல்களையும் கவனமாக சோதித்த பிறகு, குறிப்பிட்ட இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். பின்னர் உடனடியாக உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸிற்கு உங்களின் இ-பான் வந்து சேரும். அதை உங்கள் தேவைக்கு ஏற்ப பிரிண்ட் செய்துகொள்ளலாம், பயன்படுத்திக்கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை: உங்களிடம் உங்கள் பான் நம்பர் இருந்தால், உங்கள் அசல் பான் கார்டு எங்கு உருவாக்கப்பட்டது என்பதைப் பொறுத்து, UTIITSL அல்லது TIN-NSDL வலைத்தளங்களிலிருந்து உங்கள் இ-பான்-ஐ பதிவிறக்கம் செய்யலாம். பான் கார்டு அல்லது இ-பான் டிஜிட்டல் பதிப்பு ஆகிய இரண்டுமே சமமாக செல்லுபடியாகும் மற்றும் இவைகளை அசல் பான் கார்ட்டை பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.

Categories

Tech |