பான் கார்டின் பயன்பாடுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவும், நம்பகத் தன்மை கொண்டதாகவும் இருப்பதற்கு பான் கார்டு உதவுகிறது. இந்த பான் கார்டு என்பது வருமான வரி செலுத்துவதற்கு மட்டும் பயன்படும் எண் கிடையாது. இந்த பான் கார்டு என்பது 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு நிரந்தர கணக்கு எண் ஆகும். இந்த பான் கார்டில் இருக்கும் விவரங்களை உலகத்திலுள்ள எந்த இடத்திற்கு சென்றாலும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதன்பிறகு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் பண பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு மிகவும் அவசியமானதாகும். இந்த பான் கார்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எஸ்.டி.எல் என்ற அமைப்பால் வழங்கப்படுகிறது.
இந்த பான் கார்டு மூலமாக வரி, வங்கி, பண பரிவர்த்தனைகள், கடன், முதலீடுகள் மற்றும் பணத்தின் மூலம் நடைபெறும் தொழில்கள் போன்றவற்றை அரசு கண்காணிக்கிறது. இதன் மூலமாக வரி மோசடி மறைமுகமாக தடுக்கப்படுகிறது. இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை பான் கார்டு வழங்குகிறது. இந்த பான் கார்டை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பான் கார்டை ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவருக்கு மாற்ற முடியாது. இதனையடுத்து ஒரு பான் கார்டுக்கு மேல் ஒருவர் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த பான் கார்டை வாங்குவதற்கு வயது வரம்பு கிடையாது. இந்த பான் கார்டு பெறுவது மிகவும் சுலபமாகும். மேலும் பான் கார்டு பெறுவதற்கு எஸ்.என்.டி.எல் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்தும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.