Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு போட்டோவை இனி ஈஸியா ஆன்லைனிலேயே மாற்றலாம்…. இதோ எளிய வழி….!!!!

இந்திய வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பான் கார்டு பணப் பரிவர்த்தனை மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு பயன்படுகிறது. அதனால் இதிலுள்ள தகவல்கள் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளம் மட்டும் இன்றி பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பான் கார்டு பெர்மெனன்ட் அக்கவுண்ட் நம்பராக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது நிரந்தர கணக்கு எண் எனப்படும் 10 இலக்க ஆல்பா நியூமெரிக்கல் நம்பர்களை பெற்றுள்ளது.

இந்த பான் கார்டு மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும். மேலும் ஒரு வங்கியில் புதிய கணக்கை தொடங்கவும் இந்த பான் கார்டு பயன்படுகிறது. இதில் எழுத்துப் பிழை, கையொப்பம் அல்லது புகைப்படம் பொருந்தாதது உள்ளிட்டவற்றை உடனே சரி செய்ய வேண்டும். தற்போது பான் கார்டில் மிகவும் பழைய புகைப்படம் அல்லது சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ தான் இருக்கிறது என்றால் அதனை ஆன்லைன் மூலமாக சுலபமாக மாற்றி கொள்ளலாம்.

# நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று UTITSL-இன் போர்ட்டலுக்குள் https://www.pan.utiitsl.com/PAN/index.jsp என்ற இணையதளம் வழியாக செல்ல வேண்டும்.

# இப்போது அப்ளிகேஷன் டைப் பிரிவின் கீழுள்ள மெனுவில் ஏற்கனவே உள்ள பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

# அடுத்ததாக ‘கேட்டகிரி டைப்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் Individual என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

# அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகவல்களை உள்ளிட்டு அதன்பின் கேப்ட்சா குறியீட்டை கொடுத்து முடித்த பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.

# தற்போது KYC என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் ‘புகைப்படம் பொருந்தவில்லை’ மற்றும் ‘கையொப்பம் பொருந்தவில்லை’ போன்ற விருப்பங்கள் காண்பிக்கப்படும்.

Categories

Tech |