பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்ததில் 7 டன் பழைய துணிகள் அகற்றம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் பரிகாரம் செய்துவிட்டு தாங்கள் அணிந்திருந்த துணிகளை ஆற்றிலேயே போட்டு விட்டு செல்வதால் ஆற்றில் துணிகள் சேர்ந்து மோசமாக காணப்படுகின்றது. இதனால் விக்கிரமசிங்கபுரம் தூய்மைப் பணியாளர்கள் அவ்வபோது ஆற்றை சுத்தம் செய்து துணிகளை அகற்றி வருகின்றார்கள்.
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் கண்மணி உத்தரவிட்டதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான தூய்மைப் பணியாளர்கள் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டார்கள். அதில் சுமார் ஏழு டன் எடையுள்ள கழிவு துணிகளையும் 450 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தார்கள்.