நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
மலையாள திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் தமிழில் கமல் ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் பாபநாசம்-2 உருவாக இருப்பதாகவும், இதில் கவுதமிக்கு பதில் மீனா கமலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன், மீனா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை மீனாவிடம் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் பாபநாசம்-2 படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். இதற்கு நடிகை மீனா ‘கமல்ஹாசன் அவர்களிடம் கேளுங்கள்’ என பதிலளித்துள்ளார். மேலும் ‘கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.