Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாபர் மசூதி இடிப்பு தினம்…. த.மு.ம.க., ம.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு த.மு.ம.க., ம.ம.க. சார்பில் விழிப்புணர்வு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு த.மு.மு.க மற்றும் ம.ம.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் சரீப் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதிர், ம.ம.க. மாநில அமைப்புச் செயலாளர் உசேன் கனி, த.மு.மு.க. மாநில செயலாளர்கள் சலீமுல்லாகான், சாதிக்பாட்சா, உலக தமிழர் பேரவை நிறுவனர் எழிலரசன், இந்திய தேசிய காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

மேலும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொருளாளர் விடுதலை சேகரன், ராமநாதபுரம் வக்கீல் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முருகபூபதி, தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, சிறு வியாபாரிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி, த.மு.மு.க, ம.ம.க கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |