Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாபா முத்திரை” வேணும்…. ரஜினிக்கு ஏமாற்றம்….. புலமும் நிர்வாகிகள் …!!

தமிழக அரசியலில் திமுக – அதிமுக என மாறி மாறி இருந்த நிலையில் சற்று திருப்புமுனையாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் இந்த எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது.

இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 31ஆம் தேதி கட்சிக்கான அறிவிப்பு,  ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் எனவும் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அதற்கான பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு திமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியலை சிதைக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் போதும் சரி, அரசியல் குறித்த நிகழ்வுகளை பேசும்போதும் சரி ரஜினி பாபாவின் முத்திரையை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனவே ரஜினி கட்சியின் சின்னமும் அதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டது.இந்நிலையில்தான் நேற்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கியது. அதில் ரஜினிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டது. ஆனால் ரஜினி சார்பாக பாபா முத்திரைசின்னமாக கேட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னம் ஒதுக்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |