பிரான்சில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணமாக புதிய தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் உலக நாடுகள் அனைத்திற்கும் மிக வேகமாக பரவி வருகிறது.
ஆகையினால் உலக நாடுகள் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை தங்கள் அரசாங்கத்திற்குள் இருக்கும் பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி பிரான்ஸ் நாட்டில் ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை முன்னிட்டு திரையரங்குகளில் சிற்றுண்டிகள் மற்றும் பாப்கானிற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கைகள் பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.