Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாப்பாரப்பட்டியில் பராமரிக்கப்படும் “அதிசய திருவோடு மரம்”…. சில சுவாரஸ்ய தகவல்கள்…!!

தமிழகத்தில் இருக்கும் சில சைவ மடங்களில் திருவோடு மரம் அரிதாக காணப்படுகிறது. பொதுவாக இந்த மரங்கள் குளிர்ச்சி நிறைந்த வட மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, சாமியார்கள் திருவோடுகளை தேர்வு செய்து பயன்படுத்த முக்கிய காரணம் இருக்கிறது. மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாமல் இருப்பதோடு, அதனை உண்ணும் போது உடலுக்கு சக்தியையும் கொடுக்கும் தன்மை உடையது.

எனவே தான் திரு என்ற அடைமொழியுடன் இந்த மரத்தை அழைக்கின்றனர். இந்த மரத்தின் பழங்கள் உடைக்க இயலாத அளவுக்கு மிகவும் கடினமாக காணப்படும். மேலும் நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களை போலவே தோற்றமுடைய இந்த பழம் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் திறன் உடையது. இந்த அரிய மரம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் இருக்கும் தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |