Categories
உலக செய்திகள் பல்சுவை

“பாப் ஆப் கேமராகளுடன் களம் இறங்கும் ஸ்மார்ட் டிவிகள்”…. Mi டிவிகளுக்கு நேரடி சவால்…. யப்பா என்னால இருக்கு…. நீங்களே பாருங்க….!!!

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகள் நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றனர். அதற்கான காரணம் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் டிவிகள். மேலும் அதற்கு  இந்தியர்களிடையே கிடைத்த வரவேற்பும் தான். இந்த நிலையில் ஹோனர் விஷன் டிவிகள் எம் ஐ டிவிகளுக்கு நேரடியாக இவ்வளவு தானா விலை என்று சவால் விடுகின்றனர். இந்தியாவில் முதன் முதலில் சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தான் ஸ்மார்ட் டிவிகளை  அறிமுகம் செய்தது. அதற்கு ஆப்பு வைக்கும் நோக்கத்தில் பாப் ஆப் கேமரா கொண்ட ஹூவாய் ஹானர் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவை குறி வைத்துள்ளது. இந்த ஹானர் டிவிகளின் விலை அம்சங்கள், ஸ்க்ரீன் சைஸ், வடிவமைப்பு மற்றும் இந்திய விலை நிர்ணயம் போன்றவை தெரிவித்துள்ளார்.

இதனால் எந்தெந்த டிவி நிறுவனங்களுக்கு சிக்கல் என்றால் சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹூவாய் நிறுவனத்திற்கு சொந்தமான ஹானர் நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதின் வழியாக சியோமி, டிசிஎல் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களின் டிவிகளுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

இந்த நிலையில் உலகின் முதல் பாப் அப் கேமரா கொண்ட ஸ்மார்ட் டிவி ஆகும். இந்த டிவியில் ஸ்மார்ட் போன்களில் காணப்படும் பாப்-அப் செல்பீ கேமரா போன்ற அமைப்புகளை ப்ரோ மாடல் டிவியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த Honor Vision TV மற்றும் Vision TV Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் நிறுவனத்தின் சொந்த ஹார்மனிஓஎஸ் கொண்டு இயங்கும் முதல் தயாரிப்புகளாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த தீவில் சைஸ் 6.9  6.9 மிமீ ஆக அமைந்துள்ளது. மேலும் 2 மாடல் டிவிகளும் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் விலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹானர் விஷன் புரோ ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சமே அதன் மேல் இருக்கும் பாப்பாப் கேமரா நான் அதை வீடியோ அழைப்பிற்கும் பயன்படுத்தலாம்.

இதனைத் தொடர்ந்து விஷன் மட்டும் டிஸ்பிளே இரண்டு ஸ்மார்ட் டிவிக்களுமே 55 இன்ச் அளவிலான 4கே டிஸ்பிளேவையும், பக்கங்களில் குறைவான பெஸல் வடிவமைப்பையும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த டிவிகள் 178 டிகிரி அளவிலான வியூ ஆங்கிளையும் தருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த டிவியின் மற்ற பிரதான அம்சங்கள் ஹானர் நிறுவனத்தின் விஷன் டிவிகள் இரண்டுமே மாலி-ஜி 51 எம்.பி 4 ஜி.பீ.யு உடனான ஹோங்கு 818 க்வாட் கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஹானர் விஷன் டிவி ஆனது 2 ஜிபி அளவிலான ரேம் +16 ஜிபி மற்றும் ப்ரோ வேரியண்ட் அந்த 2ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த இரண்டு டிவிக்களுமே ஹார்மனிஓஎஸ் 1.0 மூலம் இயங்குகின்றன, இது கூகுள் ஆண்ட்ராய்டிற்கான ஹூவாய் நிறுவனத்தின் “மாற்று” ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு டிவி களின் விதியசங்கள் விஷன் டிவி ஆனது நான்கு 10W ஸ்பீக்கர்களுடன் மற்றும்     ப்ரோ வேரியண்ட் ஆனது மொத்தம் ஆறு (முழு-தூர மற்றும் உயர் அதிர்வெண்) 10W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு டிவிகளுமே வீடியோ அழைப்பிற்கு உதவும் ஆறு மைக்ரோபோன்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் ரிமோட் கண்ட்ரோல் ஆனது ப்ளூடூத் வழியாக டிவியுடன் இணையும் ஆதரவை பெற்றுள்ளது மற்றும் அதில் வட்ட வடிவிலான டச்பேட் ஒன்றும் உள்ளது. இந்த ரிமோட்டை நீங்கள் யூ.எஸ்.பி டைப்-சி வழியாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த இரண்டு டிவிகளுக்காண விலை மற்றும் இந்திய விற்பனை விலைசியோமி டிவிகள் வாங்க கிடைக்கும் “அதே விலையில்” ஹானர் விஷன் டிவின் விலை ரூபாய் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கும். மேலும் விஷன் டிவிகள் அடுத்த ஆண்டு 2020ம் முதல் காலாண்டில் இந்தியாவில் அதன் விற்பனையை தொடங்கும் என்று ஆன நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |