செங்கல்பட்டு, பணங்காட்டுபாக்கம் ஊராட்சி பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளதால், அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சியில் இதுவரை ஒரு முறை தான் தேர்தல் போட்டியிட்டு நடைபெற்றுள்ளது. வழக்கமாக இந்த ஊராட்சியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் ஊராட்சி மன்ற தலைவராகவும் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த முறைப்படி ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஊர் ஒற்றுமையுடன் தனசேகர் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அருண்குமார் என்பவரை பாமகவின் ஒன்றிய செயலாளராகவும் தேர்ந்தெடுத்து பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் நான்காம் தேதி அன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் முன்னிலையில் ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார் தலைமையில் இரண்டாவது வார்டு உறுப்பினர் நரசிம்மன் உள்ளிட்ட 2000 மேற்பட்டவர்கள் பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைத்து கொண்டனர். இந்நிலையில், அவர்கள் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்ததால், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளது.